விரைவில் திருமணம் செய்து கொள்ள போகும் நயன்தாரா விகனேஷ் சிவன் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியா செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதியவிடுவது வழக்கம். சமீபத்தில் இவர்கள் திருப்பதி சென்ற போட்டோகளை பதிவிட்டிருந்தார்கள்.
தற்போது இவர்கள், மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.