கேரளாவில் இப்போது தான், கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்தது. இந்தநிலையில் மழை, வெள்ளம், நிலச்சரிவுகேரளாவில் அலுமினிய பாத்திரத்தில் பயணம் செய்து திருமண மண்டபத்தை தம்பதிகள் அடைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என அடுத்தடுத்து இயற்க்கை அவர்களை வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், திருமண தம்பதிகள் அலுமினிய பாத்திரத்தில் பயணம் செய்து திருமண மண்டபத்தை அடைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆலப்புழாவில் திருமணம் செய்யவிருந்த மணமக்கள் இருவரும் வெள்ளம் சூழந்ததால் திருமண மண்டபத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
அங்கிருந்தவர்கள் சமயோஜிதமாக முடிவெடுத்து திருமணத்துக்காக வைத்திருந்த அலுமினிய சமையல் பாத்திரத்தை ஒரு படகு போல மாற்றி அதில் அமர்ந்து பயணம் செய்ய வைத்துள்ளனர். அலுமினிய பாத்திரத்தின் உதவியுடன் வெள்ளத்தை கடந்து சென்ற அவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண மண்டபத்தை அவர்கள் அடைந்ததும் மண்டபமும் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. இதனால் குறைந்த உறவினர்கள் புடைசூழ அவர்களின் திருமணம் அரங்கேறியது.