‘பிக் பாஸ்’ சீசன் 3-ல் வெற்றி பெற்ற முகென் ராவ், தனது பாடல் திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்த நிலையில் தற்போது, இவர் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
2011-ம் ஆண்டு நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வெப்பம்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அஞ்சனா. அந்தப் படத்துக்கு பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார். தற்போது இவர் முகென் ராவ் வைத்து வேலன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூரி மலையாளியாக நடிக்கிறார்.
சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், டீசரை, நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்துள்ளது.