உலக வெறிநாய் தினத்தையொட்டி , சென்னை கால் நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாய்களில் வெறிநோயை தடுக்க, எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து ஆன்லைனில் கருத்தரங்கம் நடந்தது . ஐகோர்ட் நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி துவங்கி வைத்து பேசினார்.
அனைத்து பிராணிகளுக்கும் உணவு அளித்து , துன்புறுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டியது நமது கடமை. விலங்குகளிலேயே நாய் மிகவும் நன்றி உடையது. மனிதர்களிடம் அன்பு காட்ட கூடியது.
எங்கள் வீட்டில் குழந்தை போல் வளந்த செல்லப்பிராணி 13 வயதில் இறந்தது.பிரிவை தாங்கி கொள்ள முடியவில்லை என நீதிபதி பேசிய போது கண் கலங்கினார்.
அதன் பின் நாய்கள் கிடைத்தும் , நான் வீட்டில் வளர்க்கவில்லை . தெரு நாய்களை பராமரித்து வருகிறேன்.
பிறகு பேசிய தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேர்ந்தர் செல்வகுமார் நாய் கடித்தால் , சுண்ணாம்பு வைத்தால் போதும் என நினைக்க கூடாது. உடனே மருத்துவமனைக்கு போக வேண்டும் என தெரிவித்தார். இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமை டாக்டர் ராணி கவுர் பானர்ஜி துவக்கி வைத்தார். 250 நாய் பூனைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.