• Tue. Apr 22nd, 2025

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா..,

ByKalamegam Viswanathan

Mar 24, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளி கள் மறுவாழ்வு இல்லத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிறுவ னம் சார்பாக உலக மகிழ்ச்சி திருநாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு இல்ல செயலாளர் ஆசை தம்பி தலைமை தாங்கினார்.

இதில் அலங்காநல்லூர் ஒன்றிய மாணவர்கள் அஜயன், தயாளன், கிப்டன் தேவபாலா, ஹரிஷ் நாவரசு, சுஜித் குமார் ஆகியோர் மகிழ்ச்சியாக வாழும் வழிமுறை பற்றி விளக்கிப் பேசினர். மேலும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுடன் ஆடி பாடி மகிழ்ச்சி ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் இல்ல காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.