• Thu. Apr 24th, 2025

காவலர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி ஒருவரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர்..,

ByKalamegam Viswanathan

Mar 25, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ரிஸ்ரோடு (சுற்றுச்சாலை) புதுக்குளம் கண்மாய்க்கும்,கிளாங்குளம் கண்மாய் கழுங்கிற்கு செல்லும் மண் ரோட்டில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 30 வயது முதல் 35 வயது மதிக்கதக்க ஆண் பிரேதம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

இது சம்பந்தமாக அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் திரு சிவராமன் என்பவர் பெருங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி காவல் நிலைய குற்ற எண் 41/25 U/s 194(3) BNSS வழக்கு பதிவு விசாரணை நடைபெற்ற வந்த நிலையில்

திருமங்கலம் தாலூகா காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் இரண்டு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வழக்கைக் கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், விசாரணையில் இறந்த சடலமானது சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் காவல் நிலையத்தில் முதல் நிலைக்காவலராக (Grl 2793, 2013 Batch) பணிபுரிந்து வரும் மலையரசன் 36, த/பெ. பிச்சை, அழகாபுரி, A.கொக்குளம், திருச்சுழி அஞ்சல், விருதுநகர் மாவட்டம் என கண்டறியப்பட்டது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக CCTV காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆராய்ந்ததில் மேற்படி குற்ற வழக்கில் ஈடுபட்டது மதுரை மாநகர், அவனியாபுரம், வல்லானந்தபுரம் பகுதியைச் சேந்த மணிவண்ணன் மகன் மூவேந்திரன் (எ) கார்த்திக் என்பது தெரிய வந்தது. மூவேந்தரனை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது ஆயுதத்தை வைத்து காவல்துறை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற மூவேந்தரனை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர்

தற்போது காயம்பட்ட சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனை அரிவாளால் வெட்டி தப்பி ஒட முயன்ற மூவேந்திரன் (எ) கார்த்திக் இருவரும் சிகிச்சைகாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சிவா (வயது 25) மதுரை முத்துப்பட்டி அருகே தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். கொலை செய்யப்பட்ட தனிப்படை காவலர் மலையரசன் வழக்கில் கைது செய்யப்பட்ட மூவேந்திரன் ( எ) கார்த்திக் உடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது குறித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.