


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் விவேகானந்தர் 8 ஆவது தெரு கார்த்தி என்பவர் வசித்து வருகிறார்.

இவர் வீட்டின் வெளியே வித்தியாசமாக சத்தம் ஒன்று வந்துள்ளது இரண்டு பாம்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மதுரை திருநகர் சேர்ந்த பாம்பு பிடி வீரரான சினேக் பாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்நேக் பாபு அது நல்ல பாம்பு எனவும் இரண்டு பாம்புகள் இருப்பது எனவும் தெரிவித்தார் இரண்டு நல்ல பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தார். வீட்டுக்குள் இரண்டு நல்ல பாம்புகள் இருந்தது அப்பகுதியில் படம் எடுத்து ஆடியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியின் ஆச்சரியம் அடைந்தனர்.

