• Fri. Apr 19th, 2024

பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமியின் உலக நண்பர்கள் தினம் வாழ்த்துச் செய்தி

Byதரணி

Jul 30, 2022

உலகப் போரும் நண்பர்கள் தினமும் முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஜாய்ஸ் ஹால் என்பவரால் இந்த நாள் நிறுவப்பட்டது. முதல் உலகப்போர் விளைவுகளின் மோசமான அழிவுகளை கடந்து செல்வதற்கு நண்பர்கள் தினம் பற்றிய யோசனை உருவானது. வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங்களில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த முயற்சியாக இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டது. உலக அளவில் ஒற்றுமை மற்றும் நட்புறவுகளை வலுப்படுத்துவதற்காக நட்பு தின கொண்டாட்டங்கள் தொடங்கி. இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன. இனம், மொழி, கலாசாரம், பண்பாடு என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மக்களிடையே உள்ள இடைவெளிகளைக் குறைக்க வழிவகுக்கும் இந்த நாளை வாழ்த்து அட்டைகள் தொடங்கி , சமூக வலைதளங்களான facebook, twitter, whatsapp, instagram இன்னும் அதிகப்படியான மக்களுக்கு தேவையான குறைகளையும் தேவைகளையும் வலைதளங்கள் மூலமாக கோரிக்கை அனுப்பி அதற்கு தீர்வு காண்கின்றன இன்றைய காலகட்டங்களுக்கு பயனுள்ளதாக கூகுள் மேப்ஸ்,கார் மற்றும் பஸ்களில் பயணம் செய்வதற்கு தேவையான வழி தடங்களை கண்டுபிடித்துச் செல்வதற்கு மிகவும் எளிமையாக உள்ளது வலைதளங்களில் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கின்றன மெசெஞ்சர்கள் அனைத்திலும் வாழ்த்துகளைப் பகிர்ந்து மக்கள் அழகாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அல்லல் உழப்பதாம் நட்பு. நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின்போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும். இடுக்கண் களைவதாம் நட்பு. ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவது தான் நல்ல நட்பு.

திருக்குறள் (781)

“செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு”
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் விளக்க உரை:
அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

புதிய நண்பர்கள் கிடைத்தாலும் பழைய நண்பர்களை என்றும் நினைவில் கொள்ளவும்.உலகில் உலகில் வாழும் மனிதனின் அழுத்தத்தைக் குறைக்கவும், சுயமரியாதையை வலுப்படுத்தவும், நல்ல வேலை வாய்ப்பையும், வாழ்க்கைத் தரத்தையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்த நட்பு மிக இன்றியமையாததாகும்.தீர்மானிக்கவும், நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி எல்லாவற்றிலும் மேலானது நட்பே சிறந்தது. நெருங்கிய உறவுகள் தாண்டி எவ்வளவு வயதானாலும் நாம் என்றென்றும் போற்றிப் பேணக்கூடிய பந்தம் நட்பு.

நண்பர்கள் நம் வாழ்வின் ஒரு அங்கம். நீண்ட நெடிய நம் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளில் நெருங்கிய நண்பர்கள் இல்லாமல் கடக்கவோ இல்லை கற்பனை செய்துமோ கூட பார்க்க முடியாது. சர்வதேச நண்பர்கள் தினம். நண்பர்கள் இல்லாத வாழ்வில் சலிப்பே மிஞ்சும். இந்த நட்பைக் கொண்டாடும் வகையில் சர்வதேச நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் அன்றாட வாழ்வை உற்சாகமானதாக்கும் நண்பர்களை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ள. இந்த நாள், புதிய நபர்களைச் சந்திக்கவும் பிரிந்து போன நண்பர்களை கண்டடையவும் கூட வழிவகுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *