• Sat. Apr 20th, 2024

செஸ் ஒலிம்பியாட் வெற்றியை அள்ளிய இந்திய அணிகள்

ByA.Tamilselvan

Jul 30, 2022

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று தொடங்கியது. சுமார் 350 அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடுகிறது. மொத்தம் 11 சுற்றுகள் முடிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்று தீர்மாணிக்கப்படும்.
வெற்றி பெற்றால் 2 புள்ளிகள், தோல்வி அடைந்தால் புள்ளிகள் கிடையாது மற்றும் சமன் செய்தல் ஒரு புள்ளிகள் கிடைக்கும். இந்த நிலையில், இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 அணிகளை களமிறக்கியுள்ளது. இதில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. இந்தியா பி அணியில் உள்ள சத்வாணி ரவுணக், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அப்துல் ரஹமானை எதிர்கொண்டார். சத்வாணி முதலில் வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடினார். தொடக்கம் முதலே சத்வாணி ரவுனாக், அதிரடியாக விளையாடி எதிரணி வீர்ர்களின் முக்கியமான காய்களை நகர்த்தினார். இதனையடுத்து 36வது நகர்த்தலில் ரஹ்மான் தனத தோல்வியை ஒப்பு கொள்ள , சத்வாணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்தியா பி அணி 2 புள்ளிகளை பெற்றுள்ளது. இதே போன்று மகளிர் பிரிவில், ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய சி அணி வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் நேற்று இந்திய அணி ஓபன் பிரிவில் உள்ள மூன்று அணிகள் மற்றும் மகளிர் பிரிவில் 3 அணிகளும் முதல் சுற்றில் வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் முதல்நாளில் நடந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிகள் அசத்தல் வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *