• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் மகளிர் தின கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மஞ்சூர் மின்வாரிய அலுவலக பணியாளர்கள் அலுவலகம் முன்பு ஒரே சீருடை அணிந்து கேக்குகள் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் மலர் கொத்துகள் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இதில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்


அதைத்தொடர்ந்து மஞ்சூர் பாரதியார் நினைவு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.ஓவியா ஆசிரியர் சகாயம் மற்றும் மோகன்ராஜ் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மஞ்சூர் கொட்ரகண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் இனிப்புகள் வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது