


உலக மகளிர் தினவிழா இன்று உலக முழுவதும் உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது அதே நேரத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சர்வதேச மகளிர் தினம் 08.03.2023 இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ப.சரவணன் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினர் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். மேலும் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


