• Fri. Apr 19th, 2024

உலக அங்கீகாரம் பெறுமா.. கோவாக்சின்?..

Byமதி

Oct 6, 2021

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசி, பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனகா பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அதிக அளவு பயன்படுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பிடம், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்க விண்ணப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான கூடுதல் ஆவணங்களை சமர்பிக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டதால் கடந்த மாதம் 27 ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்தது.

அதை உலக சுகாதார அமைப்பும், தனிப்பட்ட மருத்துவ குழுவினரும் ஆராய்ந்து அடுத்து வாரம் இறுதி முடிவை எடுக்கின்றனர். அப்போது கோவாக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாமா? அதன் சாதக, பாதகங்கள் ஆகியவை குறித்த தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு கோவாக்சினை அங்கீகாரம் கொடுக்கும் நிலையில், கோவாக்சினை செலுத்திய இந்திய மக்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *