• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வன உயிரின வார விழா போட்டி

வன உயிரின வார விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அரவிந்த் சான்றிதல்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌவுரவித்தார். இதில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் கருதி அவற்றை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1957ஆம் ஆண்டு முதல் வன உயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் வனத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது.

இதில் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் கேடயங்களையும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வழங்கி கௌரவித்தார்.