கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு கடையில் ஒன்றில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தநிலையில் பட்டாசு கடை தீ விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளில் பட்டாசு கடையில் தடைசெய்யப்பட்ட வெடி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.
பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பட்டாசுக்கடை முழுவதுமாக இடிந்து விழும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. சிசிடிவி காட்சிகளை கொண்டு பட்டாசு கடையில் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தீ விபத்தின்போது சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சியில் சிறுவன் சுமார் 50 அடி தொலைவிற்கு தூக்கி வீசப்பட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டாசு கடை உரிமையாளரான செல்வகணபதி கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.