
தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் 8வது வார்டுக்கு உட்பட்ட அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் வெளியேற்றம்.வாக்காளர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதிமுக திமுக வாக்கு சாவடி முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பாஜக பிரமுகர் கிரி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
