மதுரை ஐயர்பங்களாவில் உள்ள சேவியர் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தனது குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்தையும் திமுக கைப்பற்றும் திமுக கூறிய வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதிமுகவை போல் மதுரையில் மோனோ ரயில் விடுவோம், தமிழன்னைக்கு சிலை வைப்போம், சிங்கப்பூருக்கு இணையாக மதுரையை மாற்றுவோம் என்று உண்மைக்குப் புறம்பான வாக்குறுதியை திமுக சொல்லவில்லை. பெண்களுக்கு அடிப்படைத் தேவைகள் ,பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் முதல்வர் செயல்படுத்துவார். அதிமுகவினர் எத்தனை பரிசுப் பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது. ஆர்வத்தோடு வாக்களிக்க வரும் மக்களைப் பார்க்கும் பொழுது 22ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து மாநகராட்சி பேரூராட்சி நகராட்சி அனைத்து வார்டுகளிலும் 100% திமுக மாபெரும்வெற்றி பெறும் என தெரிவித்தார்.
