• Thu. Apr 25th, 2024

ஷின்சோ அபேயை கொன்றது ஏன்?

ByA.Tamilselvan

Jul 9, 2022

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொன்றகொலையாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது .அவரின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை அதனால் கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிக்கொன்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்நிலையில் அவரை சுட்டுக்கொன்ற கொலையாளியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஷின்சோ அபேயை கொன்றது ஏன்? என்பது பற்றி கொலையாளி டெட்சுயா யமகாமி கூறும்போது, ஷின்சோ அபேயின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அவர் மீது அரசியலுக்கு தொடர்பில்லாத பல புகார்கள் இருந்தன. அவர் பலமுறை இதுபோன்ற தவறுகளை செய்திருந்தார். இதற்காக அவரை கொல்ல முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *