நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக களம் இறங்கியுள்ளது. சேலையூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி “நான் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறார்” என, விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் அனைத்து கட்சிகளிலும் சூடு பிடித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சேலையூரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “இந்திய துணைக் கண்டத்திலேயே அதிக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது திமுக.அது ஏன் என்றால், எதையுமே செய்யப்போவதில்லை என்பதற்காகத்தான். ஆனால், 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்.
பொம்மைக்கு கீ கொடுப்பது போல் ஸ்டாலின் செயல்படுகிறார்; அதிகாரிகள் சொல்வதை அறிவித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்கள், பாலங்கள், கட்டடங்ளை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நான் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.