• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப மாட்டார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Byகாயத்ரி

Feb 9, 2022

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது பெரிய சர்ச்சையை எழுப்பியது.அதனால் இந்த முறை நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப மாட்டார் என செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஒருமனதாக நீட் விலக்கு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: “இந்த முறை நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பாமல் கண்டிப்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்.அதன்பின், குடியரசுத் தலைவரை தமிழக குழு சந்திக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் நீட்டை எதிர்க்கின்றனர்.மேலும், கொரோனாவால் பாதிக்கப்படுவர்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆக்ஸிஜன் தேவை 5 சதவீதமாக குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.