இந்திய குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை பாஜக ஒடிசாவை சேர்ந்த திரெளபதி முர்மு வை அறிவித்திருக்கின்றனர்.

1958ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர். இவரது கணவர் பெயர் ஷயம் சரண் மர்மு. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். புவனேஸ்வரத்தில் இராம தேவி மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். 2015-ம் முதல் 2021 வரை ஜார்கண்ட் மாநிலத்தில் எட்டாவது ஆளுநராக பதவி வகித்தவர். 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆளுநர் பதவியை பூர்த்தி செய்த முதல் பெண் ஆளுநர் இவர்தான். ஒடிசாவில் துணை முதல்வராக இருந்திருக்கிறார்.

திரெளபதி முர்மு பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் , ஆளுமை மிக்க பெண்மணி என்பதாலும் பாஜக இந்திய குடியரசுத் தலைவருக்கான பதவி போட்டியில் திரெளபதி முர்மு வை கம்பீரமாக களத்தில் நிறுத்தி இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முறைப்படி அறிவித்தார்.
