இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள கேஜி.எஃப்-2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
யஷ் நடித்த கேஜி.எஃப் முதல் பாகத்துக்கு ஸ்ரீகாந்த் கெளடா எடிட்டராகப் பணிபுரிந்திருந்தார். ஆனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்துக்கு உஜ்வால் குல்கர்னி எடிட்டராகப் பணிபுரிந்துள்ளார். முதல் படத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மேக்கிங் ரீதியாக மிரட்டலாக உள்ளதாக விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இவ்வளவு பெரிய பிரமாண்ட படத்துக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ள உஜ்வால் குல்கர்னிக்கு வெறும் 19 வயதுதான் ஆகிறதாம். இதில் அடுத்த ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப் படத்துக்கு அவர் கமிட் ஆனபோது அவருக்கு வயது வெறும் 17 தானாம்.
தற்போது எந்தப் படத்தின் ட்ரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக் வந்தாலும் அதற்கு Fan Made வெர்சன் உருவாக்குவது ட்ரெண்ட்டாக உள்ளது. கேஜிஎஃப் முதல் பாகம் வந்தபோதும் பலர் Fan Made வீடியோக்கள் வெளியிட்டனர். அதுபோலத்தான் கேஜிஎஃப்-1க்கு Fan Made ட்ரெய்லர் உருவாக்கி வெளியிட்டாராம் இந்த உஜ்வால் குல்கர்னி.
இந்த Fan Made வெர்சனால் ஈர்க்கப்பட்ட பிரசாந்த் நீலின் மனைவி தனது கணவரின் கவனத்துக்கு இதை எடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து உஜ்வால் குல்கர்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இப்படித்தான் அமைந்ததாம் இந்த வாய்ப்பு.