மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் என பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்புவை இயக்கவுள்ள மிஷ்கின் அது எந்த மாதிரியான கதை என்ற விளக்கத்தை அளித்துள்ளார்
மிஸ்கின் சிம்பு இணையும் புதிய படத்தைப் பற்றி தகவல்களை பகிர்ந்து மிஸ்கின் இப்படத்தின் கதையை சிம்புவிடம் கூறியபோது க்ளைமேக்ஸில் 100 பேரை சிம்பு அடிக்கிறார் என கூறியதும் சிம்புவுக்கு இந்த கதை மிகவும் பிடித்து விட்டது. சிம்புவுக்காக கதை வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு. இருவரும் அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக சிம்பு மற்றும் மிஸ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.