• Tue. Dec 10th, 2024

ஏ.கே.61-இல் இணையவுள்ள டாப் ஹீரோக்கள் யார்!?

அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 61 குறித்து, ட்விட்டரில் AK61Mission என்ற ஹேஷ்டேக் நேற்று இரவு முதல் டிரெண்டிங் ஆகி வருகிறது.

வலிமை படத்தை தொடர்ந்து ஏகே 61 படத்திலும் ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஆனால் இதில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் 6 ம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட ஏகே 61 படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், ஹீரோ-வில்லன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாகவும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

AK61Mission ஹேஷ்டேக் டிரெண்டிங்கிற்கு காரணம் என்னவென்றால், ஏகே 61 படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்துள்ளாராம். மோகன்லால் மட்டுமல்ல தெலுங்கு டாப் ஹீரோ நாகர்ஜுனாவும் ஏகே 61 படத்தில் நடிக்க உள்ளதாக மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஏகே 61 படத்தில் அஜித் தான் வில்லன் என சொல்லப்படுகிறது. இதனால் மோகன்லால், நாகர்ஜுனா என்ன ரோல்களில் நடிக்க போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலில் உள்ளனர். ஒருவேளை அஜித்துடன், வில்லன்களாக நடிக்க போகிறார்களா அல்லது அஜித் கேங்ஸ்டராக நடிக்கும் பட்சத்தில், போலீஸ் ரோலில் நடிக்க போகிறாரர்களா என இணையத்தில் அஜித் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.