தமிழ் சினிமாவில் இப்பொழுது முன்னணி இயக்குனராக உள்ளவர், வெங்கட் பிரபு. சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அதைத் தொடர்ந்து சரோஜா,கோவா என தொடர் வெற்றி படங்களை தொடர்ந்து, நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவுடன் இணைந்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இப்பொழுது அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள மன்மதலீலை என்ற அடல்ட் படத்தை இயக்கியுள்ளார். மன்மத லீலை வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு வெற்றிமாறன் மாதிரியான கதைகளை எடுத்து சமூகத்திற்கு அழுத்தமான மெசேஜை சொல்லும் படங்களை பண்ண வேண்டும் என முயற்சித்தேன். ஆனால் எப்படியாவது நான் எழுதும் கதையில் என்னுடைய காமெடி எனக்கே தெரியாமல் வந்து விடுகிறது. எனவே வெற்றிமாறன் மாதிரி படம் பண்றது கஷ்டம் என்பதை புரிந்து கொண்டேன். என அந்த பேட்டியில் வெங்கட் பிரபு ஓப்பனாக பேசியுள்ளார்.