பீஸ்ட் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு செம ரகளையுடன் நடிகர் விஜய் பதில் அளிக்கும் நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 10ம் தேதி இரவு 9 மணிக்கு இந்த பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய்யிடம் குட்டி ஸ்டோரி ஏதாவது இருந்தா சொல்லுங்க சார் என நெல்சன் கேட்க, ஏதும் ஸ்டாக் இல்லப்பா என விஜய் பதில் அளிக்கிறார்! இப்படி பேட்டி முழுவதுமே செம ஃபன்னாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரத்யேக பேட்டிக்காக விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.