



நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் கடந்த சில நாட்களாக காட்டெருமை, கரடி,காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அனைத்து பகுதிகளிலும் சுற்றித் திரிகிறது.இதனிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

இதேபோல் நேற்று மாலையும் தொடர் மழை பெய்து வந்த நிலையில் குன்னூர்- கொலக்கம்பை செல்லும் சாலையில் சட்டன் வனப்பகுதியில் கன மழை பெய்து வந்த நிலையில் சாலை ஓரத்தில் எட்டிப் பார்த்து மழை நின்று விட்டதா ? என பார்ப்பது போல் சிறிது நேரம், அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்தது.

இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை பார்த்தவுடன் சிறுத்தை அங்கிருந்து மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

