


சென்னையிலிருந்து லண்டனுக்கு செல்லும் முதல் பிரிட்டிஸ் ஏா்லைன்ஸ் விமானம் 162 பயணிகளுடன் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. பிரிட்டிஸ் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் 8 மாதம் இடைவெளிக்கு பின்பு நேற்று முதல் சென்னைக்கு விமான சேவையை தொடங்கிய நிலையில் நேற்று லண்டனிலிருந்து 189 பயணிகளுடன் சென்னை வந்ததது .
இந்நிலையில், இன்று காலை லண்டன் புறப்பட்டு சென்ற இந்த விமானத்தில் 158 பயணிகள்,4 கைக்குழந்தைகள் உட்பட 162 போ் உற்சாகமாக பயணித்தனர். இந்த விமானம் காலை 7.31 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட வேண்டும்.ஆனால், இன்று ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 7.04 மணிக்கு சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டு சென்றது. விமானம் தாமதத்திற்கான காரணம் என்னவென்று விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “ஆப்ரேசனல் ரீசன்” தான் காரணம்,வேறு பெரிதாக எதுவும் இல்லை என தெரிவித்தனர்.


