• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தனியார் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

ஈரோடு சூரம்பட்டி நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் சைபியுல்லா. இவர் ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லுவதற்காக பள்ளிபாளையம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது திருச்செங்கோடு அலமேடு பகுதியில் அமைந்துள்ள ரயில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த சைபியுல்லா, முன்னாள் சென்ற சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதிய சைபியுல்லா, தூக்கி வீசப்பட்டார். இதை தொடர்ந்து அவரை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இருசக்கர வாகனம் தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகும் பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதோ அந்த காட்சி…