• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தேர்வை புறக்கணித்து மாணவிகள் தர்ணா போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்து தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். தமிழக அரசு தேர்வுத்துறை தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பிற்கு இன்று முதல் நேரடி தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பி.எட், எம்.எட், இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகள் பி.இ, எம் .இ போன்ற பொறியியல் படிப்புகள், மற்றும் அனைத்து வகையான டிப்ளமோ படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனா தோற்று குறையாத நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி தேவை மற்றும் நேரடியாக தேர்வு மையத்திற்கு எழுதவும் உத்தரவை ரத்து செய்து ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த கோரிக்கை வைத்தனர்.

மேலும் ,கடந்த மூன்று ஆண்டுகளாக நேரடியாக தேர்வு எழுதிய மாணவிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தோல்வியை சந்தித்து உள்ளதால் தேர்வு மையத்தில் எழும் குளறுபடி காரணமாக மீண்டும் தாங்கள் தோல்வியடைய வாய்ப்புள்ளதாக கூறி நாகர்கோவிலில் உள்ள டிவிடி பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டைய பயிற்சி மாணவிகள் தேர்வைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.