• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பாடி ஷேமிங்’ எனப்படுவது யாதெனில்?

‘body shaming’ என்றால் என்ன? அடுத்தவரின் உடலை மதிப்பிடுவது! ஏளனப்படுத்துவது! ஒருவருக்கு மற்றவரின் உடலை பற்றி பேசுவதற்கு உரிமை யார் அளித்தது? உடல் என்பது வெறும் கூடுதானே! கண்கள் அறியா “உயிர்” என்ற ஒன்று இல்லாத பட்சத்தில், அவ்வுடலுக்கு மதிப்பில்லையே! அத்தகைய உடலுக்கு கொடுக்கும் மதிப்பினை, உயிருக்கு கொடுப்பதில்லையே! ஏன்?

எப்போதுமே, நமது உடலமைப்பைப் பற்றி நமக்கு ஒரு எண்ணம் இருக்கும். அது நமது உடலின் எடை, அமைப்பு, வடிவம் போன்றவற்றின் அடிப்படையிலானது. ஆனால், எப்போதுமே ஒருவர் அவரது உடலமைப்பைப் பற்றி நேர்மறையான சிந்தனையைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம் என்கறிர்கள். அது நமது வாழ்முறையை மட்டுமல்ல, நமது நன்னடத்தைக்கும் காரணமாக அமையுமாம்.

சில சிறார்கள், பள்ளியிலோ குடும்ப உறுப்பினர்களாலோ உருவக் கேலிக்கு ஆளாகியிருப்பார்கள். இதனால், அவர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது ஒரு வெறுப்பு உருவாகும். இதனால், அவர்களது உடலமைப்பின்மீதே எதிரொலிக்கும். சிலருக்கு இதனால் மன அழுத்தம், உணவருந்துவதில் சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்பட வழிகோலும்! இப்படி ஒரு சம்பவம் தான், திருச்சியில் அரங்கேறியுள்ளது!

திருச்சியை சேர்ந்த 13 வயது சிறுமி, உடல் எடை அதிகமாக இருந்ததால் தாழ்வு மனப்பான்மையில் உழன்று திடீரென தற்கொலை செய்துகொண்டார்! அடுத்தவர் தனது உடலை கிண்டல் செய்வதை தாங்கிக்கொள்ள முடியாமல், தன்னை வருத்திக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தன் உயிரையும் மாய்த்துக்கொண்டார் அந்த சிறுமி!

குரங்கிலிருந்து வந்த மனிதன் ஏன் சிந்தனையில் இன்னும் பரிணாம வளர்ச்சியின்றி, அங்க அவயங்களை வர்ணித்து மதிப்பீடு செய்யும் தச்சனாகவே இருக்கின்றான்.. இதில் மட்டுமே ஆண், பெண் என்ற வேறுபாடு மறக்கப்படுகின்றது என்பது சரியே! ஆனால், பேசும் முறை சரி அல்லவே! குண்டு, ஒல்லி, குள்ளம், உயரம், சொட்டை, வழுக்கை, நரச்ச முடி! இப்படி பல பல பரிமாணங்களால் “body shaming” பேசப்படுகிறது!

எப்பொழுதும் எல்லாவற்றிற்க்கும் அடுத்தவர் மீதான கருத்துகளை சொல்லி கொண்டே இருப்பது, சலிப்பாக இல்லையா? போதும் கடந்து செல்லுங்கள்! அவரவர், அவர்களது உடலை பேணிகாத்துக்கொள்வார்கள்! அதைப்பற்றி பேசுவது, உங்களுக்கான வேலையில்லை! கேட்க வேண்டிய, பல கேள்விகள் கேட்பாரற்று கிடக்கிறது, அது குறித்து தைரியமாக கேள்வி கேளுங்கள்!

பெற்றோர்கள் கவனத்திற்கு..
பெற்றோரோ.. உங்கள் வீட்டிலிருக்கும் சிறார்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்களை வெளியே கொண்டு வர வேண்டியது உங்கள் கடமைதான்.

அதற்கு சில வழிகள்..
உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள், பேச அனுமதியுங்கள். இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று சிந்தித்துப் பேசாமல், நினைத்ததை சொல்வதற்கு உங்களிடம் அவர்களுக்கு இடம்கொடுங்கள்.

ஒரு சில ஆடைகளை அவர்கள் அணியும் போது, அது நன்றாக இல்லை என்று நேரடியாகக் கூறாமல், அந்த ஆடை தரும் தோற்றத்தை எடுத்துச்சொல்லுங்கள்! எந்த ஆடையை அணியும் போது அவர்களது நண்பர்கள் அதிகம் கேலி செய்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்களது ஆடை அலங்காரத்தை மாற்ற உதவலாம்.

என் மகள்/மகன் குள்ளமாக இருக்கிறார், குண்டாக இருக்குறார், ஒல்லியாக இருக்கிறார் என்றெல்லாம் பிறரிடம் கூறாதீர்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா, நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறார்களா என்பதே முக்கியம்.. உடலமைப்பு எப்படியிருந்தாலும், சரியாக உடற்பயிற்சி செய்வதை சத்தான உணவு போன்றவற்றை உறுதி செய்து, அதில் சமரசம் வேண்டாம் என்பதை அவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை உருவக்கேலி செய்யக் கூடாது. மற்ற நண்பர்களோடு ஒப்பிடக் கூடாது. இதெல்லாம் சாதாரண விஷயம்தானே என்று நினைக்கலாம். ஆனால், ஏற்கனவே உடலமைப்பு குறித்து தாழ்வுமனப்பான்மையில் இருப்பவர்களுக்கு இது பெரும் துன்புறுத்தலாக அமையலாம் எச்சரிக்கை.