• Thu. May 2nd, 2024

பூஜை அறையும் ஒளிந்திருக்கும் ரகசியங்களும்..!

Byகாயத்ரி

Jan 28, 2022

ஒரு வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டுமென பலருக்கும் பல சந்தேகங்கள் உண்டு.முக்கியமாக எந்த திசையில் வைத்தால் நல்லது நடக்குமென்று பல்வேறு குழப்பங்கள் இல்லத்தரசிகளுக்கு உண்டு.அதை தெளிவு படுத்தவே இந்த தொகுப்பு..

நம் வீட்டில் வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் பூஜை அறை அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம் .பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும்.

அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். நாம் எப்போதும் பின்பற்றும் முறையான பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதிலும் நன்மை உள்ளது. பூஜை அறையில் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை செம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

பெரிய வீடாக இருந்தால் அந்த வீட்டின் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.தென் கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் நம் முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கவேக் கூடாது.

இது ஒரு உற்று நோக்கும் விஷயமாகும்,எனவே மறக்காதீர்.பொருளாதாரம் வீட்டிற்கு வீடு வேறுபடும் அந்த வகையில் சிறிய வீடாக இருந்தால் படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும்.

அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம்.

முக்கிய உபதேசம் என்னவென்றால் பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இளமஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும்.

அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். பூஜை அறையில் கடவுளின் மந்திரம் அல்லது ஸ்லோகன்களை தினமும் ேஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் இல்லையென்றால் நாமும் வாய் விட்டு சொல்லலாம்.

இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு சோர்க்கும்.அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

சிலர் கடமைக்காக அவசர அவசரமாக விளக்கை ஏற்றி, கையை எடுத்து கூம்பிட்டு சென்று விடுவர். இறைவனை பிரார்த்திக்கும் போது நேரம் ஒதுக்கி வழிபடுவது நல்லது. இறைவனிடம் வேண்டி விரும்பியதை கேட்டால் இல்லை என்று கைவிரிக்க மாட்டாது.

நல்ல எண்ணங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றினால்அந்த கடவுளே கேட்காமலே நமக்கு தீக்ஷை கொடுப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *