• Sun. Oct 1st, 2023

திமுக விவசாயத்தில் சாதித்தது என்ன? விளக்குகிறார் பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி..

Byமகா

Aug 23, 2022

விவசாயத்துறையில் திராவிட மாடலின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் திமுக விவசாயத்தில் சாதித்தது என்ன?அதனை விரிவாக விவரித்து கூறுகிறார் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி.

விவசாயத் துறைக்கான அரசின் வரைபடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021ல் திருச்சியில் வெளியிட்டார். அதன்படி, தற்போதுள்ள நிகர அறுவடைப் பகுதியை 60%லிருந்து 75% ஆக அதிகரிப்பது; இரட்டைப் பயிர் பரப்பு 10 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு; உணவு தானிய உற்பத்தியில் தமிழகத்தை முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என சூளுரைத்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பை ஏற்ற உடனேயே, ‘கலைஞரின் அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி’ என்ற திட்டத்தில், நீர் ஆதாரங்கள், நுண்ணீர் பாசன அமைப்புகள் மற்றும் பிற உதவிகளை உருவாக்குவதன் மூலம் தரிசு நிலத்தை விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தினர். சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் கடந்த ஆண்டு 1,997 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்கி பல்வேறு துறைகளின் அனைத்து விவசாயி சார்ந்த திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் விவசாயம் நலம் காக்கும் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு ஸ்டாலின் விவசாயத்திற்கு சிறப்பான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

சேற்றுமுறையை பாசன நெல் என்றும் கூறுவர். இந்த அமைப்பில் ஈர (பாசன) நிலையில் “விதைமுதல் விதை வரை” என்ற முறையில் பயிர் வளர்கின்றது. நிலத்தை மீண்டும் நன்கு உழுது மென்மையான 5-7 செ.மீ நிலையான நீர் தேங்கிய நிலைக்கு கொண்டு வருதல். மெல்லிய நீர் தேங்கிய நிலையை அடைந்த பின் நிலத்தை சமன்படுத்தல் வேண்டும். பின் நாற்றை நடுவதோ அல்லது முளை வந்த விதையை ஊன்றுதலோ அல்லது வீசி விதைத்தலோ செய்யலாம். பாசன நீர் இருக்கும் இடத்தில் இந்த முறையில் விளைச்சல் செய்யலாம். இப்பாசனப்பயிர் மொத்த நெல் உற்பத்தியில் 55 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் கிராமங்களில் விவசாயம் செய்யும் நெல் சாகுபடி செய்வதற்கு இது ஒரு உதவியாக இருக்கும் இதனை கடைபிடித்து விவசாயம் வேளாண் குடிகள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

நெல் சாகுபடியில் தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் காவிரி டெல்டா விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்டது. அதனால் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக குறுவை மற்றும் சம்ப சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நெல் சாகுபடி உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டு இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2021-2022-ல் நெல் சாகுபடி பரப்பு 22.05 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. விவசாயகள் மத்தியில் மகிழ்ச்சி அளிக்கிறது.

திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஒன்றரை ஆண்டில் நெல் உற்பத்தியில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது இந்த சாதனை தமிழக வரலாற்றில் முன்னேற்றிலே பொன் ஏட்டிலே பதிவு செய்யப்பட வேண்டிய நாள். தமிழ்நாட்டில் 2021-22-ல் 1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது அருகில் தெரிவித்துள்ளது மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் நீர் திறப்பு, தூர்வாரும் பணிகளால் நெல் பரப்பு மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளது. அரசின் அவர்களுக்கு மகசூல் பெருக்கம் மகிழும் உழவர் வேளாண் குடி விவசாயிகள், திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது அளித்த 7 வளர்ச்சி உறுதிமொழிகளின் படி நடப்பாண்டு நெல் உற்பத்தியே கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 1.22 கோடி மெட்ரிக் டன்னாக அதிகரித்து திராவிடம மாடலின் மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இது பொதுமக்களிடமும் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமும், நெல் கொள்முதல் செய்யும் மக்களிடமும் மற்றும் வேளாண் குடியே சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாகவும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதாக பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *