சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பாக்கம் ஏரி சுற்றுவட்டார பகுதிகளை சுத்தம் செய்தல் மற்றும் மரம் நடுதல் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரங்களை நட்டதோடு குப்பைகளை அகற்றினார்.
அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி திட்டங்களை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்….

சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது. அந்த காலங்களில் சுற்றுச்சூழல் மிக அமைதியாக இருந்தது எல்லா மனிதர்களும் தனி மனித ஆயுள் என்பது நூறாண்டு காலம் இருந்தது இன்று மனிதனுடைய ஆயுள் காலம் குறைந்துள்ளது அதற்கு காரணம் சுற்றுச்சூழல் தான்.
ஆகவே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். எல்லோரும் மரம் நட வேண்டும் இறக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும். வயல்களில் ஆர்கானிக் உரம் இடவேண்டும் கமிக்கல் உரங்களை தவிர்க்க வேண்டும். எப்படி அனைத்து வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பண்ண வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் பாரத பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு 11 ஆண்டுகள் ஆட்சியில் விவசாயிகளுக்கான ஆர்கானிக் உரம் போடுவதற்கு ஸ்வச் பாரத் என்கின்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
அனைவரும் வீட்டையும் நாட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது. ஒவ்வொருவரின் கடமையாகும் உள்ளங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது ஆட்சியாளர்கள் அவர்களுடைய உள்ளங்களையும் சுத்தமாக வைத்துக்கொண்டு தமிழக மக்களுக்கு இன்னும் ஓராண்டு காலம் அவர்களின் பணி இருக்கிறது. அதுவரை நல்லாட்சி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்வச் பாரத் திட்டத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு மத்திய அரசு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதற்கு எதிராக தான் அவர்கள் இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது டி ஆர் பாலு உறுப்பினராக இருக்கிறார். அவர் எந்த குரல் கொடுத்தாலும் எங்களுக்கு ஒன்றும் இல்லை இந்தியாவின் பாதிப்பு என்பது கேட்பதில் எந்த தவறும் இல்லை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேசப்பற்று உணர்வோடு அதை பார்க்க வேண்டும் பத்திரிகையாளர் வாயிலாக டி ஆர் பாலுடன் கேட்டுக்கொள்கிறேன்.
டி ஆர் பாலு தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலை வரவேற்று இருப்பது நல்ல விஷயம் தான் தேட்டப்பட்டு இருப்பது நல்ல விஷயம் தான்.
என்ன பாதிப்பு என அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லவா அதுவே பெரிய பாதிப்பு தான் அதையெல்லாம் அண்ணன் டி ஆர் பாலு தெரிந்து கொள்ள வேண்டும். பொறுத்திருந்து பாருங்கள் எனக் குறிப்பிடப்பட்டு சென்றார்.