நாடு முழுவதும் ஓணம் பண்டிகையை கேரள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
சேலம் ராஜா ராம் நகரில் உள்ள கேரள சமாஜம் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் ஒன்று கூடிய கேரள மக்கள் , பல வண்ணப் பூக்களால் பிரம்மாண்டமான அத்த பூ கோலம் வரைந்து, விளக்கேற்றியும், நடனமாடியும் ஒணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
