கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் வீட்டருகில் வாழை மரங்களை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்த வாழை மரத்தில் 10 அடி நீளத்திற்கு குலை வந்துள்ளது. இந்த வாழை குலையை அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிப்பதுடன், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜார்ஜ் மகள் கூறும்போது, தனது தந்தை இயற்கை விவசாய முறையில் வாழை மரங்கள் நட்டு வருவதாகவும், தற்போது இந்த வாழை மரத்தில் சுமார் பத்தடி நீளத்துக்கு குலை வந்துள்ள அதிசயம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.