குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது.அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1 வாரமாக மழை அதிகரித்து குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.





எனவே இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர். விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்தது… மெயின் அருவி, ஐந்தருவிகளில் மட்டுமே தற்போது குளிப்பதற்கான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளியலிட்டு உற்சாகம் அடைந்தனர். சில நேரங்களில் மெயின் அருவியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் பழையகுற்றாலம் நோக்கி சுற்றுலா பயணிகள் படை.யெடுக்கின்றனர். மேலும் சில இளைஞர்கள் மலை பகுதியில் மேல் சென்று செண்பக அருவி ,புலி அருவிக்கு சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.