• Sat. Apr 20th, 2024

நாளைமுதல் நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

ByA.Tamilselvan

Jul 10, 2022

நாளை முதல் நீட் தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. . நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு வருகிற 17-ந்தேதி நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் நாளை (11-ந்தேதி) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. http:/neet.nta.nie.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *