



சென்னை ஆலந்தூரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலின் வெளியே கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வகுப்பு திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாகவும் உடனடியாக இதை திரும்ப பெற வேண்டுமென இந்தியா முழுவதும் இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜமாத்துல் உலமா சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்
கிழமை சிறப்பு தொழுகை அதாவது ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய இஸ்லாமிர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என அறிவித்த நிலையில்,
சென்னை ஆலந்தூர் வேளச்சேரி ஆதாம்பாக்கம் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மசூதிகளில் ஜும்ஆ சிறப்பு தொழுகை முடிந்தபின் இஸ்லாமியர்கள் கருப்பு சட்டை மற்றும் பதாகைகளை ஏந்தி மத்திய அரசு கொண்டுவந்துள்ள வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆலந்தூர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கட்சிகள் ஜமாத்தார்கள் கூட்டணி கட்சியினர் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

