• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தாம்பரத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா..,

ByPrabhu Sekar

Jul 6, 2026

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், 300-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்கும் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு A. ஆஷிக் ஹமீது தலைமை தாங்கினார். தாம்பரம் மத்திய பகுதி கழகத் தலைவர் செ. ஜோஸ்வா சுந்தர் வரவேற்புரை வழங்கினார்.

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் த.சரத்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

விழாவில் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட இணைச் செயலாளர் இ. விஜய் தியாகு, மாவட்ட பொருளாளர் என்.வி. ராஜேந்திரன், தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் எம். பிரவீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

ஜாபர், சீனி, மாலிக், ஷரீஃப், ஜுபைர், ரீஜி, இனாமுல், ஜின்னா ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை அப்துல் ரகுமான் தொகுத்து வழங்கினார்.

மேலும், மாவட்ட மற்றும் பகுதி நிர்வாகிகள், மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி, வட்ட மற்றும் வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இறுதியாக, A. அப்துல் முனாப் நன்றி உரையாற்றினார்.