
வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் – மாநிலத் துணைத் தலைவர் கே.பி.இராமலிங்கம் கரூரில் பேட்டி,

கரூர் மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 11 ஆம் ஆண்டு நல்லாட்சி சம்பந்தமாகவும் முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
அப்பொழுது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநிலத் துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

காவிரி நதி அருகாமையில் உள்ள நகரத்தில் வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதற்கு முன்பாக சுத்தப்படுத்தி கலக்க வேண்டும்.
என்பதற்கான கடந்தாய் வாலி காவிரி திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தி மத்திய அரசு அனுமதிக்கு 2020 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாரத பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
11 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு 990 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழக அரசு அது பற்றி பணம் மத்திய அரசு வழங்கி விட்டது என்பதை கூறவில்லை இன்னும் ஓராண்டில் முதலமைச்சரின் 110 விதியின் கீழ் புதிய திட்டம் கடந்தாய் வாலி காவிரி திட்டத்தில் அதில் ஓடுகிறார் கலைஞர் என்ற திட்டம் என்று அறிவிப்பார்கள்.
எடப்பாடியை பார்த்து விவசாயி இல்லை என்று கூறுகிறார் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்திருக்கிறார்.
முருகர் பக்தி மாநாட்டிற்கு அவரை அழைத்து இருக்கிறோம்.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாலும் அவருக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் பதவி இல்லாத நிலையில் டாஸ்மார்க் ஊழல் இங்கு மையம் கொண்டிருந்தது. தற்பொழுது அந்த மையம் மாறி மணல் கொள்ளையாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக பொதுப்பணித்துறை நேரடியாக ஒரு பர்மிட் அனுமதித்து விட்டு நூறு லாரி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ஜேசிபி இயந்திரம் வேலை செய்யும் இடத்தில் 20 ஜேசிபி இயந்திரங்கள் வேலை செய்து வருகிறது. இதைக் கேட்பதற்கு யாரும் இல்லை தாசில்தார் யாராவது கேட்டால் லாரியை விட்டு அடித்து விடுகிறார்கள்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் அள்ளுவதை நேரில் சென்று ஆய்வு செய்வதை கிடையாது காரணம் அனைத்தும் லஞ்சம் PWD EE அதிகாரிகள் மாற்றத்திற்கு 25 லட்ச ரூபாய் லஞ்சம் தருவதாகவும், SE 2 கோடி ரூபாய் பெறப்படுகிறது இங்க அளப்படும் மணலில் தான் லஞ்சமாக வழங்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி டாஸ்மாக்கிலிருந்து மணல் கொள்ளைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்
சட்டம் ஒழுங்கை பார்ப்பதற்கு முதலமைச்சர் எங்கே நேரம் உள்ளது ரோட் சோ நடத்துவதற்காக 3000 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். 200 ரூபாய் காக பொதுமக்களையும் முதலமைச்சர் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் சென்று விடுகின்றனர்.
ஸ்டாலின் என்று ரோடு சோ செல்கிறாரோ அன்றெல்லாம் கொலை கொள்ளை கற்பழிப்பு செயின் திருட்டு ஆகியவை நடைபெறுகிறது. இது குறித்து டிஜிபி அறிக்கை வெளியிட வேண்டும் முதலமைச்சரின் ரோட் சோ நடக்கும்போது தான் இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
