• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆரம்ப சுகாதார நிலையம் சென்றால் நோய் தீருமோ இல்லையோ நோய் கட்டாயம் வரும் நிலை..,

ByKalamegam Viswanathan

Aug 26, 2026

மதுரை மாநகராட்சி எல்லை குட்பட்ட 70 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு வி கே பி நகர் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட நீர்நிலை தொட்டியுடன் மாநகராட்சி நகர்ப்புற நலவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

அதன் செல்லும் வழியில் குப்பைகள் மழை போல குவிந்து துர்நாற்றமும் வீசுகிறது உள்ளது மேலும் ஒருவரும் ஒருவரும் சாலையில் குப்பைகளை தூக்கி எறிவதும் அதற்கு முறையான குப்பை தொட்டியோ அல்லது மாற்றிய இடமும் இல்லை இதனால் நகர்ப்புற சுகாதார அலுவலகம் செல்லும் நோயாளிகள் நோய் தீர்வு இல்லையோ அதற்கு பதிலாக மேலும் நோய்களை வாங்கி வரக்கூடிய மேலும் குப்பைகளை கொட்டும் நபர்கள் நெகிழிப்பை அதாவது பிளாஸ்டிக் அவர்களுடன் குப்பைகளை கொட்டுவதால் அங்கு மேய்ச்சலுக்கு மாடு மற்றும் கன்றுகள் நெகிழிப் பையுடன் அதை தின்பதால் அது உடலுக்கு சென்று உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது

இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுவது தவிர்த்து வேறு எங்காவது ஒரு குப்பைத் தொட்டியை வைத்து முறைப்படி குப்பைகளை கொட்டினால் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பொதுமக்கள் எவ்வித பாதிப்பு இன்றி செல்வார்கள் மேலும் தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதியை கண்காணித்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை தொடர்ந்த அகற்ற வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்