• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மக்களுக்கு நன்றி தெரிவித்து மேடையில் வணங்கிய எம்.எல்.ஏ. விஜயன்பன் கல்லாணை..,

ByKalamegam Viswanathan

Aug 26, 2026

மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் விஜய் தலைமையில் 100 நாள் நிறைவடைந்தது. முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயன்பன் கல்லானை தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பிரம்மாண்டமான எல்.இ.டி திரை அமைத்து அதன் மூலம் சாதனைகளை விளக்கினர். மேலும் , மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிப் பாதையில் பயணிப்பதாக தவெக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். வாக்களித்த மக்களுக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்து மேடையில் வணங்கிய இச்சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு, சாதனை விளக்கப் புத்தகம் தயாரிக்கப்பட்டது. இந்த புத்தகம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு, தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் மக்களுக்காக செய்யப்பட்ட நலப்பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தவெக மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன்

கல்லானை மேடையில் பேசுகையில்,
இன்றைக்கு தமிழக மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், நாளை இந்திய மக்களுக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக நிச்சயம் உருவெடுப்பார். இதை ரசிகர் மனப்பான்மையிலோ, விஜய் மீதான பற்றின் காரணமாகவோ கூறவில்லை. மக்கள் மீதும், அவரது திறமை மீதும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூறுகிறோம்.

மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து பல்வேறு கஷ்டங்களை தாங்கி, தனது முயற்சியாலும் உழைப்பாலும் மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்று திரைத்துறையின் உச்சத்திற்கு சென்றவர் விஜய். ‘இவரெல்லாம் ஒரு தலைவரா, நடிகரா?’ என ஏளனம் செய்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை அடைந்தார்.

தவெக தொடங்கியபோது ‘சின்ன பையன், நடிகர், இவர் என்ன செய்ய முடியும்?’ என விமர்சித்தவர்கள், இன்று 70 ஆண்டுகால கட்சியைச் சேர்ந்தவர்கள் 70 வயதிலும் பதவி கிடைக்காமல் போகும் நிலை குறித்து திட்டமிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட தலைவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

மக்களின் அன்பு மற்றும் ஆதரவோடு கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றிய நமது தலைவர், அதே மக்களின் ஆதரவோடு தமிழக முதல்வராக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எதிர்கால இந்தியா இப்படிப்பட்ட ஒரு தலைவரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஒருநாள் செங்கோட்டையில் ஒரு தமிழன் தேசியக் கொடியேற்றினால், அது நிச்சயமாக தமிழக முதல்வர் விஜய்யாகத்தான் இருக்க முடியும்.

மற்றவர்கள் பேசினால் அது வெறும் ‘ஸ்பீச்’; விஜய் பேசினால் அது ‘ரீச்’. அவர் சொல்லை செயலாக மாற்றி வருகிறார்” என்றார்.

மேலும், கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் எம்எல்ஏ கல்லாணை மேடையில் மண்டியிட்டு மக்களை வணங்கினார். மக்கள் மீது கொண்ட நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் அவர் செய்த இந்த செயல், நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கல்லணை, “ரசிகர் மனப்பான்மையில் விஜய் பிரதமராக வருவார் என்று நாங்கள் கூறவில்லை” என்ற கருத்தையும் முன்வைத்தார்.