


அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் திண்டுக்கல்லில் மே 1ம் தேதி முதல் 3 ம் தேதி வரை 3 நாள் தமிழ்நாடு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7வது மாநில மாநாடு மாநில பொதுச் செயலாளர் மயில் திண்டுக்கல்லில் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 22.03.25 திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் மாநில பொதுச் செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- தமிழ்நாடு ஆர்மப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஏழாவது மாநில மாநாடு மே 1,2, 3 தேதிகள் என 3 நாட்கள் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.

மே மூன்றாம் தேதி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம் பறிக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்போம் என்னும் கொள்கை முழக்கத்துடன் எழுச்சிமிக்க மாநாடு நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பல்வேறு வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெற்று வந்த வாழ்வாதார உரிமைகளை தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசும், கடந்த முறை ஆட்சியில் இருந்த அண்ணா திமுக அரசும் போட்டி போட்டு பறித்து விட்டார்கள் பறிக்கப்பட்ட உரிமைகளை கேட்டுத்தான் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்ட களத்தில் நின்று கொண்டிருக்கிறது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூ ஊதிய திட்டத்தை அறிவித்துள்ளது அதனை நாங்கள் ஏற்கவில்லை அதற்கு காரணம் பழைய ஓய்வூ ஊதிய திட்டத்திற்கு நிகரான திட்டம் அல்ல.
சட்டமன்ற தேர்தலின் போது திமுக நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூஊதிய திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என கூறினார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியும் இதுவரை பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப் படுத்தவில்லை. இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்துள்ளனர் அந்த குழு என்பது கால தாமதம் படுத்துவதற்கான முயற்சியாகும்.
தேர்தல் வாக்குறுதி படி தமிழ்நாடு அரசு நியமித்துள்ள குழுவை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றிய அரசுக்கு நிகரான ஊதியம் பெற்று வந்தனர். ஆனால் தற்பொழுது இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வந்த ஊதியம் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்வோம் என்று தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர் ஆனால் அதைப்பற்றி எந்தவிதமான சிந்தனையும் அரசுக்கு இல்லை ஊதிய முரண்பாடு நீக்கி ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது எங்களது முக்கியமான கோரிக்கையாகும்.
தற்பொழுது தமிழகத்தில் பத்தாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன அப்படி என்றால் மாணவர்களுக்கு தரமான சரியான கல்வியை எப்படி வழங்க முடியும் எனவே தமிழக அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும்.
தமிழக அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை ஏமாற்றிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்கேற்கின்றோம். அரசுக்கு எங்களுடைய கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட உள்ள அறவழிப் போராட்டமாகும்.
இந்தப் போராட்டத்திற்கு பின்பும் தமிழக அரசு கோரிக்கைகளை புறக்கணிக்கும் ஆனால் கோரிக்கைகளை மீட்டு எடுப்பதற்காக கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என கூறினார்.

