


ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் பயன் பெறும் வகையில் 8 புதிய நகர பேருந்துகள் துவக்க விழா நிகழ்ச்சி இன்று 22.03.25 திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் மாநில உரிமைகளை பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய தொகுதி வரையறையை பாதுகாக்கவும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி தென் மாநிலம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி உள்ளது.

ஒரு ஒருமித்த கருத்தை நிலை நாட்டுவதற்காக இந்தியாவே சென்னை நோக்கி வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல மாநில முதலமைச்சர்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்.

பழனி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட உள்ளது அதில் மடத்துக்குளம் உடுமலைப்பேட்டை தொகுதிகளை சேர்ப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு :- இந்த விஷயத்தில் முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக பார்த்து ஆலோசனை நடத்தி சரியான முடிவு எடுப்பார்.
தமிழக அரசுக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தும் போராட்டம் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு எதிராக செயல்படுவதை மறைப்பதற்காக போராட்டம் நடத்துகிறாரா என்ற கேள்விக்கு :- தமிழகத்தில் எந்த முன்மொழிக் கொள்கையும் ஈடுபடாது 1965 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தி பல உயிர்கள் பறிக்கப்பட்டு அதன் பின் தமிழும் ஆங்கிலம்தான் இரு மொழிக் கொள்கை தான் என தமிழகம் ஏற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த காலத்திலேயே எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாத போது இந்தி திணிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை மும்மொழி கொள்கை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை இன்னும் ஒரு நூற்றாண்டு வந்தாலும் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு வாய்ப்பே இல்லை கால் வைக்க முடியாது.
நான் ஒரு தொகுதிக்கு மேல் கைப்பற்றி பாராளுமன்றத்தில் தனி மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என கொக்கரித்தனர். ஆனால் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தியதன் காரணமாக தற்பொழுது பாராளுமன்றத்தில் மைனாரட்டி அரசாக பாஜக உள்ளது.
தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் எந்த சமரசத்திற்கும் தமிழக முதல்வர் இடம் கொடுக்க மாட்டார்.

