சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் வி.பி.துரை சாமி, சென்னை கோட்டம் தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட விருப்பமுள்ளவர்வளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
வேளாண் சட்டங்களை மத்திய அரசால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்த நிலையிலும் விவசாயிகளால் அந்த சட்டத்தின் நன்மைகளை புரிந்து கொள்ளாத சூழ்நிலையில் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஓராண்டு காலத்துக்கு தொடர் போராட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி அவர்கள் தாமாக முன்வந்து கார்த்திகை தீபம் நாளன்று மக்களிடம் உரையாடியபோது இந்த அறிவிப்பை அறிவித்தார்.
நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டங்களை ஒப்பிட முடியாது என்றும், நீட் தேர்வு பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படுத்தியுள்ளது என்றும், வெறும் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் நீட் விஷயத்தை விடாமல் பிடித்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வுக்கு முன்னால் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு அதன் வாயிலாக அரசியல் ஆதாயத்தை தேடும் திமுக அரசு இந்த நாடகத்தை கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.