• Fri. Apr 19th, 2024

மீண்டும் பாகிஸ்தானில் டிக்டாக்…தடையை தகர்த்தியது அரசு

Byகாயத்ரி

Nov 22, 2021

டிஜிட்டல் உலகில் பெருவாரியான மக்கள் சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். அதில் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகள் ஏராளம். அந்த வகையில் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் டிக்டாக் ஒன்று.

பல்வேறு வகைகளில் எல்லை மீறியதால் இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போலவே பாகிஸ்தான் நாட்டிலும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு டிக்டாக் பிரபலங்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு காரணங்களை கூறி கடந்த 15 மாதங்களில் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு நான்கு முறை பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. அந்த நான்கு தடையையும் பின்னர் குறிப்பிட்ட காலத்தில் பாகிஸ்தானில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.


அந்த வரிசையில் தற்போது, அநாகரீகமான கருத்துகளை பரவுவதை தடுப்பதாக டிக்டாக் நிறுவனம் உறுதி அளித்ததன் பேரில் தடையை விலக்கிக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். பாகிஸ்தானில் மட்டும் 39 மில்லியன் மக்கள் டிக்டாக் செயலியை டவுன்லோட் செய்துள்ளனர். சீன நிறுவனம் வடிவமைத்த இந்த செயலி கடந்த 2020 அக்டோபரில் பாகிஸ்தான் முதன்முதலாக தடைவிதித்தது பாகிஸ்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *