• Fri. Apr 26th, 2024

அக்னிபத் திட்டத்தை திரும்பபெற மாட்டோம்

ByA.Tamilselvan

Jun 20, 2022

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பீகார், பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரயில்நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் ரயில்நிலையங்களை அடித்துநொறுக்கினர். இந்த எதிர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு பல்வேறு அறிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பது குறித்து முப்படைகளும் நேற்று (ஜூன் 19) அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பின்னர் இத்திட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி, முப்படைகளில் சேவை செய்பவர்களுக்கான வயது குறைக்கப்படுவது தொடர்பான ஆலோசனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கார்கில் மறு ஆய்வுக் குழுவும் இது குறித்து தங்களது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அரசு இந்த அக்னிபத் திட்டத்தை செயல்படுத்தப் போகிறது. அதனால், இளைஞர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட வேண்டும், என்றார்.
அக்னிபத் திட்டம் குறித்து கப்பற்படை அதிகாரி தினேஷ் திரிபாதி கூறியதாவது. கப்பற்படை தலைமையகம் வருகிற ஜூன் 25 முதல் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்ட சேர்க்கை வருகிற நவம்பர் 21 முதல் நடைபெற உள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் கப்பற்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சேர்க்கப்படுகின்றர், என்றார்.
அக்னிபத் திட்டம் குறித்து விமானப்படை அதிகாரி எஸ்.கே. ஜா கூறியதாவது. விமானப்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பிற்கு ஜூன் 24 முதல் பெயர் பதிவு தொடங்க உள்ளது. ஆன்லைனில் ஒரே கட்டமாக நடைபெறும் ஆள் சேர்ப்பிற்கான பணிகள் ஜூலை 24 முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக தேர்வாகுபவர்களுக்கு டிசம்பர் 30 முதல் பயிற்சி அளிக்கப்படும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *