



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பி எஸ் கே பார்க் அருகை அமைந்துள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் திருவருட்சிலைக்கு அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு நகர அஇஅதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கரின் திரு உருவச் சிலைக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என். எம். கிருஷ்ணராஜ் தலைமையில் தெற்கு நகர செயலாளர் பரமசிவம், வடக்கு நகர செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் நகர செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிந்து மரியாதை செய்தனர். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி .விடுதலை சிறுத்தை கட்சிகள் ,தமிழக வெற்றி கழகம்,காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

