



விருதுநகர் மாவட்டத்திற்கு இப்போது கலை இலக்கிய பொற்காலம். காரணம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அர்ப்பணிப்பு மிக்க இலக்கியப் பணி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அன்னல்பட்டி கிராமத்திற்கு தவறாமல் வந்து விட்ட அவரது ஈடுபாடு. அதை விட ரசனையான ஒரு நிகழ்வு நடந்தேறியது.

மேடையில் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். அனைவரும் வேண்டுகோள் விடுத்தார்கள்.அதில் ஒருவர் மட்டும், தனது வீட்டிற்கு குடி நீர் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீர் வழங்குவது அரசியல் சட்டம் 21வது பிரிவு தனக்கு வழங்கியுள்ள உரிமையாகும்.. எனவே அரசியல் சட்ட உரிமைப்படி தனக்கு உடனே குடிநீர் வழங்க கோரியிருந்தார்.

அவரை மிகவும் பாராட்டிய ஆட்சியர் மனு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். உரிமையைக் கேட்கத் தயங்கக்கூடாது என்றவர், உடனடியாக நடவடிக்கை எடுத்து விபரக்குறிப்பை ஆட்சியரிடம் நேரில் தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கிராம மக்களின் பலத்த கரவொலிக்கிடையே மேடையில் இதை அறிவித்தார்.

