• Tue. Apr 16th, 2024

ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம் – மதுரை மருத்துவ மாணவர்கள்

ByA.Tamilselvan

May 2, 2022

மதுரை மருத்துவகல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. ஆனால் ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம். சமஸ்கிருதத்தில் ஏற்கவில்லை என மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் விளக்கமளித்துள்ளனர்
மதுரையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முன் தினம் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேல், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர் சங்கத் தலைவர் உறுதிமொழியை வாசிக்க அதை முதலாண்டு மாணவர்கள் வாசித்தனர். அதில் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சப்த் பெயரில் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.சர்ச்சை தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து மாணவர் சங்கத்தினர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி என்பது இரு நாட்களுக்கு முன்னர்தான் எங்களுக்கு தெரியும். இதனால் நிகழ்ச்சியை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தோம். நாங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் இருந்துதான் உறுதிமொழியை டவுன்லோடு செய்தோம். அதிலும் ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோமே தவிர சமஸ்கிருதத்தில் அல்ல. அவசரமாக நடந்த நிகழ்ச்சியால் நாங்கள் டவுன்லோடு செய்த காப்பியை டீனிடம் காண்பிக்க முடியவில்லை. மேலும் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது. என மாணவர்கள் சங்கத்தினர் விளக்கமளித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *